கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன?!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 9,608,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 139,736 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 90,58,003 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 410,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனா தொற்றால் 36,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம், முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் வழக்கபடுத்தி கொள்வோம்.