இந்தியாவில் கொரோனாவின் நிலை என்ன? மீள்கிறதா தேசம்?
இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தில் புதியதாக தினமும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் செல்கிறது.
கொரோனா தொற்றால் உலகமே நிலை தடுமாறிக்கொண்டிருந்தாலும், இந்தியாவில் அந்த நிலை சற்றே தளர்ந்துள்ளது என்று கூறலாம். நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கி தினமும் புதிய பாதிப்புகள் ஏற்பட்ட இடத்தில், தற்பொழுது குறைவாகவே பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில், 9,351,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 136,238 பேர் உயிரிழந்துள்ளனர், 8,758,886 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 41,353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 4,56,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நம் விழிப்புடன் இருந்தால் கொரோனாவில் இருந்து மீளலாம்.