இந்திய -சீன எல்லைப் பிரச்சனையின் உண்மை நிலவரம் என்ன ? பிரதமர் விளக்க வேண்டும் -சோனியா காந்தி வலியுறுத்தல்
20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.சீன ராணுவம் தரப்பில் சுமார் 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இது குறித்து பேசியுள்ளார்.அவர் பேசுகையில், 20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.அந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி. இந்த வலியை எதிர்கொள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.எல்லைப் பிரச்சனையை கையாள்வதில் மத்திய அரசின் கொள்கை என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விளக்க வேண்டும்.மேலும் இந்திய -சீன எல்லைப் பிரச்சனையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.