தடுப்பூசி குறித்து பிரதமர் என்ன தான் சொல்ல வருகிறார்?, ராகுல் காந்தி கேள்வி!
தடுப்பூசி விவகாரம் குறித்து பிரதமர் என்ன தான் சொல்ல வருகிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்திய முழுவதிலும் 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் 30 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி குறித்து இந்தியாவின் பல ஆய்வு கூடங்களில் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்னும் கண்டுபிடித்த பாடு இல்லை.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தடுப்பூசி தயாரிக்கப்பட்டதும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் என கூறினார், பாஜக பிரமுகர்கள் பீகார் தேர்தலில் அனைவர்க்கும் இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்படும் என கூறியதாகவும், ஆனால், இந்திய அரசாங்கம் தங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை எனவும் கூறுகிறது. தடுப்பூசி குறித்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என கேட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
PM- Everyone will get vaccine.
BJP in Bihar elections- Everyone in Bihar will get free vaccine.
Now, GOI- Never said everyone will get vaccine.
Exactly what does the PM stand by?
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2020