இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக 49,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 49,912 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,038,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 120,563 பேர் உயிரிழந்துள்ளனர், 7,314,951 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் தவிர தற்பொழுது மருத்துவமனைகளில் 603,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.