மர்மம் என்ன ? எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? சிதம்பரம் கேள்வி
எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில், இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? என்றும் இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?
பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?
— P. Chidambaram (@PChidambaram_IN) July 3, 2020