பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களும் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? -ராகுல் காந்தி
பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களும் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது மனதை உலுக்குகிறது. இந்திய அரசாங்கம் இதற்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். நமது சொந்த நிலத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களும் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என பதிவிட்டுள்ளார்.
This is heart wrenching. GOI must give a real reply.
What exactly is the home ministry doing when neither civilians nor security personnel are safe in our own land?#Nagaland pic.twitter.com/h7uS1LegzJ
— Rahul Gandhi (@RahulGandhi) December 5, 2021