பட்ஜெட்டில் எதற்கு முக்கியத்துவம்.? நிர்மலா சீதாராமன் விளக்கம்.!

Budjet 2024

மத்திய பட்ஜெட் 2024 : மக்களவையில் 2024-2025 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டை தாக்கல் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன்.

இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றதுடன்மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான படஜெட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என கூறி இருந்தார்.

அதில் வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்த உள்ள 9 அம்சங்களை பற்றியும் இந்த இடைக்கால பட்ஜெட் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் கூறி இருந்தார்.

வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் 9 அம்சங்கள்:

1. விவசாய உற்பத்தித்திறன்
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு
3. மனித வள மேலாண்மை மற்றும் சமூக நீதியை
4. உற்பத்தி & சேவைகள்
5. நகர்ப்புற வளர்ச்சி
6. ஆற்றல் பாதுகாப்பு
7. உட்கட்டமைப்பு
8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி
9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்