ஹோலி பண்டிகை என்றால் என்ன?

Default Image

ஹோலி பண்டிகை என்பது அரங்கபஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை இந்து மதத்தினர் இளவேனிற்காலத்தை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை ஆகும். ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.

இந்த பண்டிகை பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் போன்ற மாதங்களில் தான் கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் மக்களுக்கு அதிகமாக சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில், அன்று இப்பண்டிகையை மிகவும் வண்ணமயமாக பல வண்ண தூள்களை தூவி கொண்டாடுகின்றனர். 

வடமாநிலங்களை பொறுத்தவரையில், ஒருவருக்கொருவர் வண்ண தூள்களை தூவி மிகவும் மகிழ்ச்சியாக இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் போது, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை களைந்து மிகவும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடுவது தான் இதன் சிறப்பு. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்