வரியை தூக்கி போட்ட டிரம்ப்.! இந்தியா என்ன போகிறது.? சாதகமா..? பாதகமா..?
இந்திய அரசு இதன் தாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், இது ஒரு பின்னடைவாக இல்லாமல் இதனை ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர், இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விகிதத்தை 26 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ட்ரம்ப் , ”இன்றைய தினமே அமெரிக்காவின் விடுதலை நாள் என்றும், அமெரிக்காவை விட பிற நாடுகள்தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன” என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா எங்களிடம் 52% வசூலிக்கிறது, ஆனால் நாங்கள் அவர்களிடம் அதில் பாதியாக 26% வசூலிப்போம் என்று கூறியதோடு, இந்தியப் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று சொன்னாலும், “இந்தியா நம்மை சரியாக நடத்தவில்லை” என்று குற்மும் சாட்டினார்.
அமெரிக்கா உடனான வர்த்தக கொள்கைகளைப் பொருத்தவரை, இந்தியா மிகவும் கடினமாக நடந்துகொள்வதாகவும், இந்திய சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் கடினமாக்குவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வர்த்தக வரி அதன் ஏற்றுமதி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆட்டோமொபைல் துறைக்கு மார்ச் கடைசியில் 25% வரி விதிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த வரி விதிப்பில் சீனா தான் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கும்?
டிரம்பின் அதிரடி வரி விதிப்பால் இந்திய ஜவுளிகள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் நகை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 26% வரி விதிப்பால், இந்த துறைகள் உடனடியாக பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதில், மருந்துபொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருந்து பொருட்கள் ஏற்றுமதி பாதிக்குமா என்பது போக, போகத் தான் தெரியுமாம். இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியா எடுக்கபோகும் முடிவு என்ன?
இந்த சூழலில், இந்திய அரசு தனது வர்த்தகக் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஏற்ப தனது பொருளாதார மூலோபாயத்தை சரிசெய்ய முயலும். இந்திய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள். இதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, அமெரிக்கா விதித்த 26 சதவீத பரஸ்பர வரியின் பொருளாதார தாக்கத்தை, இந்திய அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாக வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று PTI ஊடகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாடு அமெரிக்காவின் வர்த்தக கவலைகளை நிவர்த்தி செய்தால், வரிகளை தனக்கு சாதகமாக திருத்த முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், இந்தியா – அமெரிக்க இடையே பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தியா தனது பொருளாதார நலன்களை பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
26 சதவீத வரி சாதகமா..? பாதகமா..?
26 சதவீத வரி விதிப்பால் இந்தியாவுக்கு நல்லதும், கெட்டதும் உள்ளது. நல்லது என்னெவென்றால், வெளிநாட்டு பொருட்களுக்கு வரி போட்டு நம்ம ஊர் தொழில்களை பாதுகாக்கலாம், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அரசுக்கு பணம் கிடைக்கும். கெட்டது என்னெவன்றால், வெளிநாட்டு பொருட்கள் விலை ஏறும், நம்ம ஏற்றுமதி பாதிக்கப்படலாம், குறிப்பா டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் துறைகளுக்கு சிக்கலாக்ககூடும்.
இந்தியாவோட பலமான உள்ளூர் பொருளாதாரம் பெரிய பாதிப்பை குறைக்கும், ஆனா சில துறைகளுக்கு ரிஸ்க் இருக்கு. வர்த்தகப் போர் வந்தாலும் இந்தியாவின் பேச்சுவரத்தை மேற்கொண்டு நிலைமையை சரி செய்யும். இந்தியாவுக்கு உள்ளூர் தொழிலை பாதுகாக்கும், இதன் மூலம் பணம் கிடைத்தாலும் விலை ஏற்றம் காரணமாக ஏற்றுமதி செய்வதில் சிக்கல் வரலாம்.