காங்கிரஸ் கட்சிக்கும் ,சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன ஒப்பந்தம் ? என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் அளித்த நிதியுதவி குறித்து குற்றம் சாட்டினார் பாஜக தேசிய தலைவர் நட்டா.மேலும் சீன நிதியில் தான் அறக்கட்டளை செயல்படுகிறதா?என்றும் கேள்வி எழுப்பினார்.
நட்டாவின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பதிலில்,2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழுங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது. சீன ஆக்கிரமிப்பை எப்படி,எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இது வரை பதிலில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன ஒப்பந்தம் உள்ளது கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…