காங்கிரஸ் கட்சிக்கும் ,சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன ஒப்பந்தம் ? நட்டா கேள்வி

Default Image

காங்கிரஸ் கட்சிக்கும் ,சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன ஒப்பந்தம் ? என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் அளித்த நிதியுதவி குறித்து குற்றம் சாட்டினார் பாஜக தேசிய தலைவர் நட்டா.மேலும் சீன நிதியில் தான் அறக்கட்டளை செயல்படுகிறதா?என்றும் கேள்வி எழுப்பினார்.

நட்டாவின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பதிலில்,2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழுங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது. சீன ஆக்கிரமிப்பை எப்படி,எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இது வரை பதிலில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன  ஒப்பந்தம் உள்ளது கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்