சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது.? என்று ராகுல் காந்தி ட்வீட்.
கொரோனா பரவல், பொது முடக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு மத்தியில் சில மாதங்களாக இந்திய எல்லையான லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதுவும் சீன ராணுவம் நமது நிலங்களை ஆக்கிரமித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்திய மற்றும் சீனா தங்களது ராணுவ படைகளை குவித்து வருகிறது.
இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், அசாதாரண சூழல் நிலவு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்றும் அதுவும் கடவுளின் செயல் என விட்டு விடப்போகிறதா மத்திய அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…