பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆறு வாரங்களில் 67 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார். தானே உருவாக்கிய இந்த சுகாதார நாசத்தில் இருந்து தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, மாநிலங்களின் மீது சுமையை திணித்து உள்ளார்.
தற்போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி பணியை பிரதமர் மோடி தொடங்கவேண்டும். தொற்றால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு பணமும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும். சென்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும். பி.எம் கேர் நிதியை விடுவிக்கவேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி தடுப்பூசிக்கு செலவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…