என்ன செய்வது மோடி ஐயா….? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி…!
ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், எனது ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிகிறது.
ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் நடத்தப்படுகிறது. பின்னர் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடக்கிறது இதனால் குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்ன குழந்தைகள் இந்த அதிக விலை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது மோடி ஐயா…? வணக்கம். இவ்வாறு என்ற சிறுமி கூறியிருந்தார்.