இப்போது நடப்பது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் – ராகுல் காந்தி ட்வீட்
மேல்முறையீடு மனு மீது குஜராத் அரசு, மனுதாரர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராகுல் காந்தி ட்வீட்.
பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கடந்த 23-ம் தேதி சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய எதுவாக ஜாமீனும் வழங்கப்பட்டு, தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைத்தனர்.
மேல்முறையீடு:
சூரத் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உடனடியாக மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் நீட்டிப்பு:
அப்போது, அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. சூரத் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் 30 நாள் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அதை நீட்டித்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம். ராகுல் ஏப்ரல் 13-இல் நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றம் உத்தரவு:
அதுமட்டுமில்லாமல், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தொடர்பாக குஜராத் அரசு, மனுதாரர் பதிலளிக்க ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று இவ்வழக்கு முடியும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்து, வழக்கு விசாரணையை மே 3-ஆம் தேதி ஒத்திவைத்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
ராகுல் ட்வீட்:
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இப்போது நடப்பது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம், இந்தப் போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம், உண்மையே எனது பலம் என தெரிவித்துள்ளார்.
ये ‘मित्रकाल’ के विरुद्ध, लोकतंत्र को बचाने की लड़ाई है।
इस संघर्ष में, सत्य मेरा अस्त्र है, और सत्य ही मेरा आसरा! pic.twitter.com/SYxC8yfc1M
— Rahul Gandhi (@RahulGandhi) April 3, 2023