புனித வெள்ளி என்றால் என்ன? இந்த நாளை மக்கள் ஏன் அனுசரிக்கின்றனர்?

Default Image

புனித வெள்ளி என்பது உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக் கூடிய ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாளை பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த புனித வெள்ளி கிறிஸ்து பட்ட பாடுகளையும், அவரின் சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும்  விதமாக கொண்டாடப்படுகிறது. 

இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவதுண்டு. 

கிறிஸ்து பிறப்பிப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், கிறிஸ்து பிறப்பிப்பதற்கு பின்பிருந்த காலம் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் கூறப்படுகிறது. பழைய ஏற்பட்டு காலங்களில் இருந்தவர்கள், தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஆட்டுக்கு குட்டியை பலியிடுவார்கள். ஆசாரியன் அந்த ஆட்டுக்குட்டியை பலியிட்டு அந்த இரத்தத்தை அவர்கள் மீது தெளித்தால், அவர்களது பாவம் மன்னிக்கப்பட்டது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. 

ஆனால், புதிய ஏற்பாடு காலத்தில், இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சி, அந்நாட்களில் தலைமை குருவாய் இருந்த காய்பாவின் மாமனாரான அன்னா அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். 

மக்கள் எல்லாருக்காகவும், மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியாக, சிலுவையில் பலியானார். இதனை தான் மக்கள் அனைவரும் புனித வெள்ளி என்று அனுசரிக்கின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்