பட்ஜெட் என்றால் என்ன?
நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான திட்டங்கள் மற்றும் நோக்கங்களை அறிந்து, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருட்களை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரையில், ஒன்றிய பொது நிதியறிக்கையை நிதி அமைச்சகம் உருவாக்குகிறது. பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்கு விலகல் ஆகிய துறைகளை இந்த அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது.
இனிவரவிருக்கும் காலங்களில் வரவு செலவு கணக்குகளையும், அவற்றின் தேவைகளையும் முன்னமே திட்டமிட்டு நிதியறிக்கையை தயார் செய்து திட்டமிட்டபடி நடத்துவது தான் நிதியறிக்கையின் பிரதானமான நோக்கமாகும்.