ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.
மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது.இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…