நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? ப. சிதம்பரம்

Default Image

நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள் .மத்திய அரசு மாநிலங்களுக்கு இதுவரை தந்தது டிசம்பர்-ஜனவரி மாதங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஆகும். மாநில பேரிடர் நிதியிலிருந்து முதல் தவணை மற்றும் ரூ 15,000 கோடி சுகாதார கட்டுமான நிதியிலிருந்து ஒரு பங்கு. விரைவு பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதில் தடங்கல், தாமதம். எல்ஐசி (LIC) கிளை அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, ஏன் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். வங்கிகளில் தங்க நகைக் கடன்களை தர மறுக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்