M.G.R அரசுக்கு காங்கிரஸ் என்ன செய்தது….பிரதமர் மோடி கேள்வி…?
பட்ஜெட் அறிவிப்புக்கு பின் மக்களவை கூட்டத்தொடர் முடிந்து அதற்குப்பின் நேற்று தொடங்கி மக்களவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் குடியரசுதலைவர் உரை நிகழ்த்தினார்.இதையடுத்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.காங்கிரஸ் கட்சி_யின் குறைகளை சுட்டிக்காட்டி பேசினார்.மேலும் அவர் பேசுகையில் , M.G.R , N.T.R உள்ளிட்ட மாநில அரசிற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேள்வியெழுப்பி காங்கிரஸ் எல்லா பிரச்சனைக்கும் காரணம் மோடி தான் என்று கூறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.