அமெரிக்காவை போன்ற சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் ? உத்தவ் தாக்கரே

Published by
Venu

அமெரிக்காவை போன்ற சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.

 இதனிடையே  நீட் ,ஜேஇஇ ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி நடத்தும் காணொளி   மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ,சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் ,ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ,மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ,பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் ,ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசுகையில், அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால் 97 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழல் இந்தியாவிலும் ஏற்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்காவை போன்ற சூழல்  இந்தியாவில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும். இதனால்  நீட் , ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும்  இதனை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

2 minutes ago

சர்ச்சை பேச்சு! “மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “-பொன்முடி

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…

44 minutes ago

LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.  போட்டியில்…

1 hour ago

‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!

சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை  ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…

2 hours ago

“அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…

2 hours ago

பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

3 hours ago