அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

நட்பு நாடான அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.

Opposition leader Rahul Gandhi

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர வரி (இறக்குமதி வரி) விதிமுறையை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார்.

இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிமுறை பற்றி பல்வேறு உலக நாடுகளும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்ற்னர். இது குறித்து பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் பற்றி கூறினார். இந்த வரி விதிமுறையானது இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

மேலும், நட்பு நாடான அமெரிக்கா திடீரென இந்திய பொருட்கள் மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்துள்ள முடிவு, நமது பொருளாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் நடைமுறையாகும். நமது ஆட்டோமொபைல் துறை, மருத்துவத்துறை மற்றும் விவசாயம் என அனைத்தும் இந்த வரி விதிப்பால் பாதிப்பிற்கு உள்ளாகிறது. நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரி கட்டணம் விதித்துள்ளது பற்றி நீங்கள் (மத்திய அரசு) என்ன செய்யப் போகிறீர்கள்? என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து கேள்விகளை எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்