3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக போராடுகிறீர்கள்?
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கு மேலாக இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெரும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், விவசாயிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாலையில் செல்லக்கூடியவர்கள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் பல சிரமங்களை சந்திப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடியிருப்புவாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கன்வில்கர் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில், சாலை மறியலுக்கு, தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உத்தியாரப்பிரதேசம்,ஹரியானா, டெல்லி காவல்துறையினர் கணைகளை தடுத்து நிறுத்தியிருப்பதால் தான், சாலைகளிலேயே அமர்ந்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே 3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக போராடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. மத்திய அரசும் தற்போதைக்கு இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு அனைத்து தரப்பும் தெளிவாக இருக்கும் போது, விவசாயிகள் எதற்காக போராடுகிறீர்கள். நீங்கள் யாருக்கு எதிராக, எதற்கு எதிராக போராடுகிறீர்கள் என பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…