3 வேளாண் சட்டங்களும் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்…? – உச்சநீதிமன்றம்

Default Image

3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  எதற்காக போராடுகிறீர்கள்?

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கு மேலாக இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெரும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாலையில் செல்லக்கூடியவர்கள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் பல சிரமங்களை சந்திப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  குடியிருப்புவாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கன்வில்கர் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில், சாலை மறியலுக்கு, தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.   உத்தியாரப்பிரதேசம்,ஹரியானா, டெல்லி காவல்துறையினர் கணைகளை தடுத்து  நிறுத்தியிருப்பதால் தான், சாலைகளிலேயே அமர்ந்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  நீதிபதிகள், ஏற்கனவே 3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  எதற்காக போராடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. மத்திய அரசும் தற்போதைக்கு இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு அனைத்து தரப்பும் தெளிவாக இருக்கும் போது, விவசாயிகள் எதற்காக போராடுகிறீர்கள். நீங்கள் யாருக்கு எதிராக, எதற்கு எதிராக போராடுகிறீர்கள் என பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்