நாங்க என்ன கார்டூன்களா? அல்லது வேலை இல்லாதவர்களா ? : கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆவேசம்
இன்று ஊடங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வது சாதாரணமாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வதற்கு அரசியல்வாதிகள் என்ன கார்டூன்களா? அல்லது வேலை இல்லாதவர்களா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்றும், அரசியல்வாதிகளை கேலி செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.