இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25- ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னர், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வருகின்ற 31- ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் திறக்க ஆலோசித்து வருவதாகவும், திரையரங்குகளில் 30% பேர் அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில்களை இயக்க டெல்லி மாநில அரசு அனுமதியை கோரியுள்ளது. ஆனால், மத்திய அரசு இது குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மத்திய அரசு தளர்வுகளை அறிவிக்கின்ற மாதிரி இருந்தால் கவனமாக அறிவிக்கும் என தெரிகிறது.
நேற்று முன்தினம் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கொரோனா வைரஸ் துவக்கத்தில் இருந்ததை போலவே இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…