இடைக்கால பட்ஜெட்_டில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புக்கள் என்னென்ன…!!
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முனைவோரின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தின் கடைசி கால பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட்டை நாளைய தினம் தாக்கல் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த பட்ஜெட் வெளியீட்டில் தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் பட்ஜெட் வெளியிட இருப்பது தொடர்பாக நூற்பாலை சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், “செயற்கை இழையை பொருத்தவரை GST – வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வருமான வரியின் உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.