இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றதற்கு தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி என வி. நாராயணன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

isro narayanan

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் பட்டமும் பெற்றவர். அவரின் தொழில்நுட்ப திறன்களாலும், பிரமாண்டமான திட்டங்களை கையாண்ட அனுபவம் அவரிடம் உள்ளது. எனவே, இஸ்ரோவின் சிறப்பான வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் வருங்க இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றியும், தலைவராக தான் தேர்வானது குறித்தும் மனம் திறந்து பேசினார்.

இது குறித்து பேசிய அவர் ” இஸ்ரோவின் தலைவராக நான் தேர்வாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி நான் பதவியேற்கவுள்ளேன். எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது மிக முக்கியமான பொறுப்பாகும். நான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து 41 ஆண்டுகள் ஆகிறது.” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார். இது பற்றி பேசிய அவர் ” எதிர்காலத்தில் இஸ்ரோவுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, நிலவுக்கு மனிதர்களை அனுப்பி திரும்பவும் கொண்டு வரும் ககன்யான் திட்டம் இருக்கிறது. விண்வெளி நிலையம் அமைப்பதற்கான ஸ்பேடக்ஸ் திட்டம், நிலவின் மேற்பரப்பில் செயற்கைக்கோளை இறக்கி அங்கிருந்து மாதிரிகளை கொண்டுவரும் சந்திரயான் 4 திட்டம் ஆகியவை இருக்கிறது.

சந்திரயான் 3 செயற்கைக்கோள் 4000 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட நிலையில், சந்திரயான் 4 செயற்கைக்கோள் 9000 கிலோ எடையுடன் உருவாக்கப்பட உள்ளது. இஸ்ரோவின் அனைத்து திட்டங்களும் நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் அமையும்” எனவும் நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்