என்ன தவம் செய்தாய் தாயே! பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்!
பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்.
நேற்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டின நிகழ்வை, பிரதமர் மோடியின் தாயார் தொலைக்காட்சியில் பார்த்த போது, அடியெடுத்து கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தை, பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘என்ன தவம் செய்தாய் தாயே!! இப்படிப்பட்ட மகத்தான மகனைப் பெறவே! அம்மகணையும் நாட்டுக்கே தந்தாய். உன்னை வணங்குகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
என்ன தவம் செய்தாய் தாயே!! இப்படிப்பட்ட மகத்தான மகனைப் பெறவே! அம்மகணையும் நாட்டுக்கே தந்தாய். உன்னை வணங்குகிறோம் ???? pic.twitter.com/UTMnJzPb1x
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 6, 2020