வாட்ஸ் ஆப் மூலம் உதவி கோரிய மருத்துவர்! சாலை விபத்தில் மருத்துவரின் அபார செயல்…..
காயமடைந்த எய்ம்ஸ் மருத்துவர் டெல்லி அருகே சாலை விபத்தில் தான் காயமடைந்து கிடந்த இடத்தின் ஜி.பி.எஸ் முகவரியை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உதவிகோரியுள்ளார்.
டெல்லி அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 மருத்துவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
காயமடைந்த மருத்துவர்களில் ஒருவரான கேத்தரின் ஹலாம், தான் காயமடைந்து கிடக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் முகவரியை, வாட்ஸ் ஆப் மூலம் சக மருத்துவர்களுக்கு அனுப்பி உதவி கோரியுள்ளார். இதனை அடுத்து உதவி அனுப்பப்பட்டு அவர்களில் காயம் அடைந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.