குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ! சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய 4 -வது மாநிலம்

Published by
Venu
  • குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியது.
  • இதனைத்தொடர்ந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு கேரளா ,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்களே இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் அல்லாமல் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான காங்கிரசும், ஆளும்கட்சியுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்றது.இதன் பின்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கேரள அரசு போலவே மேற்கு வங்க அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றது.மேற்கு வங்க மாநில முதலமைச்சரான மம்தா பனர்ஜியும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்,பேரணிகள் என்று நடத்தியுள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மம்தா கூறி வந்தார்.இந்நிலையில் இன்று  குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் இதற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Recent Posts

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

24 mins ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

9 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

12 hours ago

சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பாக்க பிளான்?

இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…

12 hours ago

ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…

13 hours ago

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!

அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…

13 hours ago