மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! டிசம்பர் 30இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!
மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக, ஹவுரா- நியூ ஜல்பைகுரி வழித்தடத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு வழித்தடங்களிலும் பயண நேரம் 7.5 மணிநேரம் எனவும், வாரத்தின் ஆறு நாட்களில் இயங்கும் எனவும் கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஏகலப்ய சக்ரவர்த்தி தெரிவித்தார்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு நியூ ஜல்பைகுரி நிலையத்தை சென்றடையும், பிறகு 1 மணிநேரம் கழித்து 2:30 மணிக்கு வடக்கு பெங்கால் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஹவுராவை வந்தடையும் எனவும் சக்ரவர்த்தி மேலும் தெரிவித்தார்.