சென்னையில் இருந்து சென்ற தொழிலாளர்கள் மரங்களில் குடில் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைதவிர்த்து மற்ற நேரங்களில் மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட நாளுக்குள் வந்தவர்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், நம் நாட்டில் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்களை ஒரு கிராமமே மரங்களில் தங்க சொல்லி தனிமைப்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் பாங்கிதீ எனுமிடத்திற்கு கடந்த 22ஆம் தேதி 7 தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் வருவதை தெரிந்த ஊர்மக்கள் ஊரின் எல்லையில் உள்ள மரங்களில் கிளைகளுக்கு நடுவே குடில்போல அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவை மரத்தடியில் அவரவர் குடும்பத்தினர் வைத்து செல்வர். உணவு உண்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு மட்டுமே அவர்கள் மரத்தில் இருந்து கீழே இறங்குகின்றனர்.
இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை மீட்டு அரசு கட்டடத்தில் தங்க வைத்துள்ளது.