மேற்குவங்க ரயில் விபத்து 15 பலி – பிரதமர் மோடி நிவாரணம்.!

Train Accident - Prime Minister

மேற்குவங்கம் : ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டு, அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில், “மேற்குவங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும்” கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்