மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. தற்போது வரை இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
தற்பொழுது, ஜல்பைகுரியில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் அலட்சியம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மேற்குவங்க ரயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது. நாட்டில் ஒரு பக்கம் ரயில் விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மறுபக்கம் ரயில்வே அமைச்சர் அவரின் பொறுப்பை விட்டுவிட்டு, ரீல்ஸ் பதிவிட்டு வெற்று விளம்பரங்களை செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.
மோடி அரசு ரயில்வே பாதுகாப்புக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால், அதை வைத்து பணம் மட்டுமே சம்பாதித்துள்ளனர். பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறான முறையிலும் பயன்படுத்தியதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. ரயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரம். இதன்மூலம் இத்துறையை அவரின் நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறது. ரயில்வேயை சீரழிப்பதில் மோடி அரசு குறியாக உள்ளது இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…