மேற்கு வங்கம் ரயில் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு!
மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்பொழுது, இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளைப் பற்றிய தகவல்களை குடும்பங்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில் விபத்தில் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு உதவி பெற, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்.
சீல்டாவில் உள்ள ஹெல்ப் டெஸ்க் எண்
033-23508794 , 033-23833326
ஹெல்ப்லைன் எண்: GHY நிலையம்
03612731621
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.