மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த அவரை முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…