மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாம் முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவி வகித்து உள்ள மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் மம்தா பானர்ஜி மட்டுமே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது .இதில் 19 இணையமச்சர் உள்பட 43 அமைச்சர்கள் பதவிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்நிலையில், இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் பொழுது மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது பாஜக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக வந்துள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி அவர்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…