கொடூரமான பெண்ணை மீண்டும் தேர்ந்தெடுத்ததன் மூலம் மேற்கு வங்காள மக்கள் ஒரு வரலாற்று பிழையை செய்துள்ளனர் – பாபுல் சுபிரியோ
கொடூரமான பெண்ணை மீண்டும் தேர்ந்தெடுத்ததன் மூலம் மேற்கு வங்காள மக்கள் ஒரு வரலாற்று பிழையை செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி குறித்தும், பாஜக தோல்வி அடைந்தது குறித்தும், பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில், வங்கத்தில் மம்தா பானர்ஜி வென்றதற்காக நான் அவரை வாழ்த்த மாட்டேன். மக்கள் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று கூற விரும்பவில்லை. ஏனெனில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு வழங்காததன் மூலமும், மம்தா பானர்ஜியை மக்கள் தேர்ந்தெடுப்பதன் மூலமும் வங்காள மக்கள் ஒரு வரலாற்று தவறு செய்ததாக நான் நினைக்கிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, நேர்மையற்ற அரசாங்கமும், கொடூரமான பெண்ணும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆம், சட்டத்தை மதிக்கும் குடிமகனாக ஒரு ஜனநாயக நாட்டில், மக்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கீழ்ப்படிகிறேன். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமில்லை, குறைவானது எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மம்தா பானர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்ததையடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட பதிவினை சற்று நேரத்தில் நீக்கியுள்ளார்.