மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் – 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!

Trinamool Congress

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் 1,714 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கும் , 9,730 பஞ்சாயத்து ஊர் தலைவர் இடங்களுக்கும் மற்றும் 928 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் கங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 8,232 இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, 2,712 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் 1,714 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றி பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் 362 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 215 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

West Bengal panchayat election
[Image Source : Twitter/@ANI]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்