மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டம்-மேற்குவங்க அரசு புறக்கணிப்பு

- மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டம் நடைபெறுகிறது.
- இந்த கூட்டத்தில் மேற்குவங்க அரசு பங்கேற்கவில்லை.
இந்தியா முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, மக்களின் விவரங்களை சேரிக்கும் வகையில் மக்கள் தொகை பதிவேடும் நடத்தப்படும்.ஆனால் பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது . இன்று டெல்லியில் மக்கள் தொகை பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் மக்கள்தொகை இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பனர்ஜி கூறுகையில் , மேற்கு வங்க அதிகாரிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025