பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – மேற்கு வங்க அரசு அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 1 ரூபாய் குறைப்பதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே விலையை குறைக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.
இது தொடர்பாக மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறுகையில் ,பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை எரிபொருளின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்களுக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் என்று கூறியுள்ளார்.பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.32.90 வும் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ.31.80 ம் வருவாயாக மத்திய அரசு பெறுகிறது.ஆனால் பெட்ரோல் மீது ரூ.18.46 மற்றும் டீசல் மீது ரூ.12.77 மட்டுமே மாநில அரசு வருவாயாகப் பெறுகிறது.மேலும், மாநிலங்களுடனான அதிகாரப் பகிர்வைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு செஸ் வரி விதித்ததாக குற்றம் சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025