குடியுரிமை சட்டதிருத்த விவகாரம்…!!! நெற்றிக்கண்ணை திறந்தார் மம்தா…!!! முடிந்தால் என் பிணத்தை தாண்டி கொண்டுவாருங்கள் என ஆவேசம்…!!!

Published by
Kaliraj
  • இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும், பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு,  குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமானது.
  • இந்தமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.வங்க முதல்வர் ஆவேச கருத்து.
இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்கலான  அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள்  மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட முக்கய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்திலும் போராட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி தனது கருத்தை ஆவேசமாக கூறியுள்ளார்,
அதில்  அவர்,  நான் உயிருடன் இருக்கும் வரை இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்றும்,அதையும் மீறி  அவர்கள் விரும்பினால்  எங்கள் அரசை சட்ட பிரிவு 356 ஐ பயன்படுத்தி  பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் அதற்க்காக  நாங்கள்  உங்களிடம் சரணடைய மாட்டோம். மேலும் கூறிய அவர், அதையும் மீறி கொண்டுவரவேண்டுமானால், என் பிணத்தை தாண்டிதான் அவர்கள் மேற்கு வங்கத்தில்  குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் செயல்படுத்த முடியும் என்று சற்று ஆவேசமாக தெரிவித்தார். இதனால் பற்றி எரியும் மே.வங்கத்தில் மேலும் இந்ததகவலும் வேகமாக பரவி வருகிறது.
Published by
Kaliraj

Recent Posts

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

12 minutes ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

21 minutes ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

1 hour ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

1 hour ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 hours ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

2 hours ago