மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த அனுமதி ஒரு ‘அரசியல் கோணத்தில்’ மறுக்கப்பட்டது என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வர் பங்கேற்பதற்கான அந்தஸ்துக்கு ஏற்ப நிகழ்வு இல்லை என கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி அன்னை தெரசாவை மையப்படுத்தி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இத்தாலிய அரசு, மம்தா பானர்ஜியை எந்த பிரதிநிதிகளுடனும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. மம்தா பானர்ஜி பின்னர் தொழில் துறை பிரதிநிதிகள் அனுமதியை முன்மொழிந்தார். அதற்காக வெளியுறவு அமைச்சகத்தை கோரினார். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பட்டாச்சார்ய தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இத்தாலி பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு. ஏற்கனவே, சீனா பயணத்தை ரத்து செய்தது.
சர்வதேச உறவுகளையும், இந்தியாவின் நலன்களையும் மனதில் வைத்து அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஏன் இத்தாலி மோடி ஜி? மேற்கு வங்கத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…