வருகின்ற அக்டோபர் 7 -ம் தேதி பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.
முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா்.இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து,பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா்.அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார்.
இதனையடுத்து,கடந்த செப்.30 ஆம் தேதி நடைபெற்ற பவானிபூர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னதாக எண்ணப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும்,அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26320 வாக்குகளும் பெற்றனர்.இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,தன்னை எதித்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இதனால்,அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார்.
இதற்கிடையில்,ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில்,வருகின்ற அக்டோபர் 7 -ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவானிபூர்,ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான மூன்று எம்எல்ஏ -க்கள், முதல்வர் மம்தா பானர்ஜி, அமிருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…