இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார்.
இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளையும் பெற்றனர்.
இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, வருகின்ற அக்டோபர் 7 -ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அவர்கள், பவானிபூர், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான மூன்று எம்எல்ஏ -க்கள், முதல்வர் மம்தா பானர்ஜி, அமிருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025