உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவி விலக வேண்டும்.!மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

ஆட்சி கவிழும் என மிரட்டல் விடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறினார்.  

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்துவது, உத்திரபிரதேச என்கவுண்டர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா என பல்வேறு கருத்துக்களையும் அவர் நேற்று கூறியிருந்தார்.

5 தொகுதிகளை வெல்லுங்கள் :

அவர் பேசுகையில், மேற்கு வங்கத்தில் வரும் பொது தேர்தலில் 35 இடங்களை பாஜக கைப்பற்றினால் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என மம்தா தெரிவித்தார். முதலில் மேற்கு வங்கத்தில் ஒரு ஐந்து தொகுதிகளை வெல்ல முயற்சி செய்யுங்கள். பிறகு 35இல் வெற்றி பெறுவது பற்றி நினைக்கலாம் என அமித்ஷா கருத்துக்கு தனது விமர்சனத்தை முன் வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அமித்ஷா ராஜினாமா :

மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா பற்றி பேசுகையில், நாட்டை காப்பாற்ற மத்திய உள்துறை அமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து அரசை கவிழ்க்க உள்துறை அமைச்சர் முயற்சி செய்கிறார். 2025ஆம் ஆண்டுக்குள் மேற்கு வங்கத்தில் எங்கள் ஆட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கவிழும் என பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார். நாட்டை அமைதி படுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து வந்த உள்துறை அமைச்சர் இவ்வாறு பேசியதற்கு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.

மக்கள் குரல் கொடுக்க வேண்டும் :

மேலும், பேசிய அவர், மேற்கு வங்கத்தில் எக்காரணம் கொண்டும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறினார். மேலும், உத்தர பிரதேசத்தில் அண்மையில் நடக்கும் அதிக என்கவுண்டர்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் என்கவுண்டர் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை எதிர்த்து மக்கள் தான் போராட வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

Published by
மணிகண்டன்

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

27 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago