எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாகவும் மரியாதையை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறியிருந்தார். பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரையும் சந்தித்தார்.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதன்பின் பேசிய அவர், பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை எனவும் கூறினார்.
இதனிடையே, மேற்கு வங்கம் தேர்தல் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…