மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 25ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் 25ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மம்தா டெல்லிக்குச் செல்வது இதுவே முதன்முறையாகும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இன்னும் சில எதிர்க்கட்சித் தலைவர்களை முதலவர் மம்தா பானர்ஜி சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு நான் டெல்லிக்கு வரவில்லை. இப்போது கொரோனா நிலைமை சற்று குறைவாக உள்ளது. நான் பாராளுமன்றத்தின் போது டெல்லிக்குச் செல்வேன் என்றும் நண்பர்களைச் சந்திப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், எனக்கு நேரம் வழங்கப்பட்டால், பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷன் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த சந்திப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வலிமையுடன் போராட இந்த சந்திப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனிடையே, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சந்த பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசியதும் தேர்தல் திட்டம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி, சோனியாவை சந்திக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…